பக்தி பாடலுக்கு "நோ".. செல்போனில் 'டாம் & ஜெர்ரி' கார்ட்டூன் பார்க்கும் பூனை..
திருத்துறைப்பூண்டி அருகே, வீட்டில் வளர்க்கப்படும் பூனை செல்போனில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனை ஆர்வமுடன் ரசிக்கும் காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
ஜெயலட்சுமி என்பவர் லூசி என்ற பெயரில் வளர்த்துவரும் பூனை, செல்போனில் காமெடி காட்சியையோ அல்லது பக்தி பாடலையோ பிளே செய்தால் தன் கால்களால் ஆப்பை குளோஸ் செய்துவிடுகிறது.
ஆனால் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனை மட்டும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்ப்பதோடு, செல்போனுக்கு பின்னால் டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் பூனையையும், எலியையும் தேடிபார்க்கிறது.
Comments